நிருவனப் பிரிவு
பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்துக்கு எப்படி வருகை தருவது?
- ஹெட்டிபொல பஸ் நிலையத்திவிருந்து சிலாபப் பாதையில் 200 மீற்றர் அளவு தூரம் முன்னோக்கி வருகை தந்த பின் ஹெட்டிபொல தபால் நிலையத்துடன் அமைந்துள்ள கட்டிடம் பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகமாகும்
கிராம உத்தியோகத்தர் பிரிவு இலக்கம் தொடர்பான விசாரணை?
- இந்த பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவகர் பிரிவுகள் 67 உள்ளன.
- இக் கிராம சேவகர் பிரிவுகளில் இலக்கம் மற்றும் அது சம்பந்தமான விபரங்கள் நிருவாகக் கட்டமைப்பு, கிராம சேவகர் பிவுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது
வியாபார பெயர் பதிவிற்கு உரிமையாளர் கட்டாயம் வர வேண்டுமா?
- உரிமையாளர் கட்டாயம் வர வேண்டும். வரும் போது தேசிய அடையாள அட்டையை கொண்டுவர வெண்டும்.
மரணித்த ஒருவரின் வங்கியில் இருக்கும் பணம் மற்றும் ஈடு வைத்த பொருள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் யாவை?
-
இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்
-
விண்ணப்பதாரிக்கும் இறந்தவருக்கும் இடையிலான உறவுமுறையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் (பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ்)
-
வேறு யாரும் அங்கத்தவர்களிருப்பின், விண்ணப்பதாரிக்கு பணம் அல்லது பொருட்களை கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்
-
தேசிய அடையாள அட்டை
சமூக சேவைப் பிரிவு
கற்பினித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 20,000 ரூபா பெறுமதியான போசனைக் கொடுப்பனவை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- கர்ப்பம் தரித்து 03 மாதங்கள் செல்லும் முன்னர் நீங்கள் பங்குபற்றிய மகப்பேற்று மருத்துவமனை உரித்தாகும் பிரதேச செயலகத்தில் உள்ள முன் குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது அதற்கு பொறுப்பான உத்தியோகத்தரிடம் அதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கல்வி உதவியைப் பெற்றுக்காள்ள முடியுமானவர்கள் யார்?
- தந்தை இறந்து இருப்பின் அல்லது குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் பாடசாலை செல்லும் வயதில் உள்ள மாணவர்களுக்கு இந்த உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்வது எவ்வாறு?
- நிறுவனம் தொடங்கி ஒரு வருடம் சென்ற பின்னர் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பதிவு செய்யலாம்.
சமூர்த்தி உதவி புதிதாக பெற்றுக்கொள்ள முடியுமா?
- தற்போது சமூர்த்தி உதவி வழங்கப்படாது என்பதுடன், எதிர்காலத்தில் வழங்குவதற்காக முறைப்பாடுகள் கவனத்திற் கொள்ளப்படும்.
மாவட்ட பிரதிப் பதிவாளர் பிரிவு
இறப்பு/ பிறப்பு/ திருமண சான்றிதழ் பிரதிகளைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- இறப்பு/ பிறப்பு/ திருமண சான்றிதழ்களின் இலக்கம் மற்றும் திகதி தெரிந்திருப்பின் 100 ரூபாய் மற்றும்.
- இறப்பு/ பிறப்பு/ திருமண சான்றிதழ்களின் இலக்கம் தெரியவில்லை எனின் 200 ரூபா பிரதேச செயலகத்திற்கு செலுத்துவதன் மூலம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
- கொழும்பில் நடைபெற்ற திருமணம், பிறப்பு அல்லது இறப்பு எனின் அதற்கான சான்றிதழ்களை கொழும்பு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்
பிறப்பைப் பதிவது எவ்வாறு?
- சாதாரண மகப்பேறு எனின் பிறப்பு நடைபெற்று 03 மாதங்கள் செல்ல முன்னர் பிறப்பு பதிவு செய்யும் பதிவாளருக்கு தெரிவித்து பதிவு செய்து கொள்ள வெண்டும்.
- மகப்பேறு நடைபெற்று 03 மாதங்கள் கடந்திருப்பின் மாவட்ட பிரதி பதிவாளரை சந்தித்து உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஓய்வூதியப் பிரிவு
சிவில் ஓய்வூதியர் ஒருவர் இறந்த பின்னர் அவரது விதவைகள் ஓய்வூதியத்தைப் பெறுவது எவ்வாறு ?
- முதலாவதாக ஓய்வூதியம் பெறுபவரின் இறப்புச் சான்றிதழை பெற்றவுடன் அவரது ஓய்வூதியத்தை நிறுத்துதல்.
- வங்கியில் மேலதிகமாக பணம் இருப்பின் அதனை பெற வங்கிக்கு கடிதம் அனுப்புதல்.
- அதன் பிறகு உரிய நபருக்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தல்
- ஓய்வூதியரின் இறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
- விதவையின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
- திருமண சான்றிதழின் மூலப்பிரதி
- விதவையின் வங்கிப் புத்தகத்தின் நிழற்பிரதி
- விதவையின் தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி
- விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய இலக்கத்தின் நிழற்பிரதி
- கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட கடவுச் சீட்டு அளவு நிறப் புகைப்படம்
- மேலே குறிப்பிடப்பட்ட நிழற்பிரதிகள் அனைத்தும் கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஓய்வூதியர் ஒருவரது ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படுவதற்கான காரணங்கள்?
- குறிப்பிட்ட வருடத்திற்குரிய உயிர் வாழ் சான்றிதழ் சமர்பிக்கப்படவில்லை எனின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.
- உறுதிப்படுத்திய உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் அவரது ஓய்வூதியத்தை மீண்டும் பெறச் செய்தல்.














